பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது என்பதும் மூன்றாவது வாரம் இறுதிப்போட்டி என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசனுடன் கலந்துகொண்ட ஜெயம் ரவி, பிளாஸ்மா டிவி மூலம் போட்டியாளர்களிடம் பேசுகிறார்.
அவர்கள் விளையாடும் விதம் குறித்து கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசிய ஜெயம் ரவி, அதன்பின் கமல்ஹாசனிடமும் பேசினார். கமல்ஹாசன் அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியை நீங்கள் பார்ப்பீர்களா? என்று கேட்டபோது, பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்ல நீங்கள் எது செஞ்சாலும் நான் தொடர்ந்து பார்ப்பேன். ஏனெனில் நான் உங்களுடைய வெறித்தனமான பக்தன் என்றும் ஜெயம் ரவி கூறுகிறார். பிக்பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவியின் திடீர் விசிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் ஜெயம் ரவியின் இந்த செயல் பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரதனத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். அதற்குக் காரணம் இந்த கெட்டப்போடு வெளி உலகுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை விதித்திருந்தாராம். அதையும் மீறி பூமி படத்தின் ப்ரமோஷனுக்காக ஜெயம் ரவி அதில் கலந்து கொண்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். ஆனால் ரசிகர்களோ இதே கெட்டப்போடுதான் அவர் பூமி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ரிலிஸானால் கெட்டப் தெரியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.