சந்தோஷ் இயக்கத்தில் காமத்தை விரும்பும் பேய் எனும் காமெடி கதைக்களத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இப்படத்தில் கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம். நடிகர், நடிகைகள் யார் என்ற அறிவிப்பு நவம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.