இருமுகன் படத்தைக் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் எழுதப்பட்டாலும், படம் தயாரிப்பாளரின் கல்லா குளிர குளிர வசூலித்திருக்கிறது. நேற்று சக்சஸ் மீட் கொண்டாடியது படக்குழு.
இருமுகன் நேற்றுவரை தமிழகத்தில் 29.5 கோடிகளை வசூலித்திருப்பதாகவும், உலக அளவில் வசூல் 66 கோடிகள் என்றும் தெரிவித்தனர். அதாவது போட்ட காசை படம் எடுத்துவிட்டதாம்.
சென்னை சிட்டியை பொறுத்தவரை இந்த வருடம் கபாலி, தெறிக்குப் பிறகு இதுதான் அதிகபட்ச ஓபனிங். சத்யம் திரையரங்கிலும் கபாலி, தெறிக்குப் பிறகு இந்தப் படம் தான் அதிகம் வசூலித்ததாக கூறியிருக்கிறார்கள்.