இரு முகனில் ஆக்ஷன் குயினாக மாறிய நயன்தாரா

புதன், 27 ஜூலை 2016 (10:31 IST)
விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள ஆக்ஷன் படம் இரு முகனில் நயன்தாராவும் ஆக்ஷனில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம்.


 
 
பில்லா படத்திலேயே நயன்தாரா ஆக்ஷன் காட்ட ஆரம்பித்தார். இந்நிலையில் இரு முகனில் அவரது சண்டைக் காட்சிகள் மிகவும் சிரத்தையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. கவர்ச்சி இமேஜிலிருந்து கரையேற துடிக்கும் நயன்தாராவும் மிகுந்த ஈடுபாட்டோடு இரு முகன் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம் என்கின்றன தகவல்கள்.
 
இரு முகனில் விக்ரம் 'ரா' உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இன்னொரு வேடம் திருநங்கை என்கிறார்கள். ஆகஸ்டில் பாடல்களை வெளியிட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்