பாகுபலி கதைக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள்!

சனி, 6 மே 2017 (15:19 IST)
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸான  படம்  ‘பாகுபலி 2’. ராஜமௌலியின் பாகுபலி பட பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. இப்படம் பற்றிய சில தெரியாத தகவல்களும் வெளிவந்து ஆச்சர்யப்படவைக்கின்றன.
 

 
பாகுபலி 2 முழுக்க வரலாற்று கதாபாத்திரம் என்பதால் உடை, அணிகலன்கள் என மிகுந்த முக்கியதுவம் கொடுக்க வேண்டியிருந்தது. அதிலும் ரம்யா கிருஷ்ணன் ராஜமாதா சிவகாமிக்கும், அனுஷ்கா தேவசேனாவுக்கும் தான் நகைகள்  வடிவமைப்பதில் பெரிய ரிஸ்க் இருந்ததாம்.
 
ஹைதாரபாத்தை சேர்ந்த பிரத்யேக நகை வடிவமைப்பாளர்களின் கைவினைக்கு பின் கதையே இருக்கிறது. பாகுபலி  படத்திற்காக உருவாக்கப்பட்ட நகைகளுக்கு அம்ராபலி கலெக்‌ஷன்ஸ் என்கிறார்கள். படப்பெயரும், நகைப்பெயரும் பொருத்தமாக இருக்கிறதல்லவா. யார் இந்த அம்ராபலி? என கேள்வி வந்தபோது தான் தெரிந்தது இவள் ஒரு பேரழகியாம்.
 
கி.மு 500 ம் ஆண்டில் வாழ்ந்த வைஷாலியின் பேரழகியாக இருந்தவராம். இவளின் அழகில் மயங்கிய அரசன் அவளை  அனைவருக்கும் சொந்தமாக்க விரும்பி அவளின் காதலனை கொன்றுவிட்டாராம். பிறகு பௌத்தமத துறவியாக மாறிய அவளின் குற்றமற்ற தன்மையை புத்தரே அங்கீகரித்தாக சில தகவல்கள் சொல்கிறதாம். அப்போதே இந்த அம்ராபலியின் வாழ்க்கையை  படம்மாக்கியுள்ள பாலிவுட் சினிமா, அம்ராபலியாக ஹேமா மாலினி தான் நடித்திருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்