விபத்து பற்றி விசாரித்த ரசிகர்களுக்கு கூலாக பதிலளித்த நடிகர் ஜெய்

வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (15:28 IST)
வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் பார்ட்டி. இப்படத்தில் இவருடைய நண்பர்கள் கேங்தான் நடித்து வருகின்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாக இருக்கும் `பார்ட்டி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. இந்நிலையில் நேற்று நடிகர் ஜெய் மற்றும் ப்ரேம்ஜி குடித்துவிட்டு காரை ஒரு பாலத்தில் மோதியுள்ளனர்.

 
விஜய் நடிப்பில் நேற்று மெர்சல் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்த படத்தில் வரும் டயலாக் பீஸ் ப்ரோ (Peace Bro) செம்ம ட்ரெண்ட் அடித்துள்ளது, ஜெய் நேற்று குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தியது குறித்து  எல்லோரும் அவரிடம் விசாரிக்க, நடிகர் ஜெய் கூலாக Peace Bro என்று பதில் அளித்துள்ளார்.
 
இதனையடுத்து மெர்சல் படத்தில் வரும் Peace Bro செம்ம ட்ரெண்டாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்