இஞ்சி இடுப்பழகியின் தோல்வி - கவலையில் அனுஷ்கா

புதன், 23 டிசம்பர் 2015 (09:51 IST)
பாகுபலி, ருத்ராம்மாதேவி படங்களில் முக்கிய வேடம் என்றாலும் துணைக்கு பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தது.


 

 
அருந்ததி போல் அனுஷ்கா ஆல்ரவுண்டராக அப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இஞ்சி இடுப்பழகி அப்படியில்லை. அனுஷ்காதான் எல்லாம்.
 
அந்தப் படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்து தன்னையும் தன் உடம்பையும் மிகவும் வருத்திக் கொண்டார் அனுஷ்கா. ஆனால், பலன்...? பூஜ்ஜியம். படம் படுதோல்வி.
 
இந்த தோல்வி அனுஷ்காவை சங்கடப்படுத்தியிருக்கிறது. நம்முடைய ராசி சரியில்லையோ என்று சோதிடர்களிடம் கேட்குமளவுக்கு அனுஷ்காவை தள்ளியிருக்கிறது இஞ்சி இடுப்பழகியின் தோல்வி. 
 
முன்னணி நடிகையாக இருப்பதில் எத்தனை சிரமம் பாருங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்