விரைவில் இந்தியன்-2 பட ஷூட்டிங்- உதய நிதி ஸ்டாலின் உறுதி

புதன், 8 ஜூன் 2022 (17:37 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில்,. சிபி சக்கரவர்த்தி இயக்கிய படம் டான். இப்படம் கடந்த 12 ஆம் தேதி வெளியானது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்ட உயய நிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ டான் படம் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

மேலும், கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இடையில் நின்றுபோன இந்தியன்-2 படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், இந்தியன் 2 படம் வேலைகள் ஆரம்பமாகும் என உறுதிபடத் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை உதய நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்