மாற்றான், அனேகன் படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் விஜய் சேதுபதி மற்றும் டி.ஆரை வைத்த படம் இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
வழக்கம்போல் திரைக்கதையில் எழுத்தாளர்கள் சுபா பங்களிப்பு செலுத்தி உள்ளனர். இந்தப் படத்தில் கூடுதலாக மதன் கார்க்கியும் இருக்கிறார்.
மடோனா செபஸ்டின் நாயகியாக நடித்துவரும் இந்தப் படத்தின் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கே.வி.ஆனந்த் கூறியுள்ளார். விரைவில் பிறக் காட்சிகளையும் முடிக்க உள்ளனர்.
பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லவும் திட்டம் உள்ளதாம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியா இல்லை டி.ஆரா என்ற சுவாரஸியக் கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாமலே உள்ளது.