சென்ற வருட இறுதியில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்த சென்ற வருடத்தின் கடைசிப்படம் என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
விமர்சகர்களின் பாராட்டை பெற்ற இந்த த்ரில்லர் படத்தை 21 வயதேயான கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். ரகுமான் வேடத்தில் யார் நடிப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.