மலையாளத்தில் மோகன்லால் படத்தில் நடிக்கும் விஷால்

சனி, 28 ஜனவரி 2017 (16:14 IST)
மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தில் விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். விஷால் நடிக்கும் முதல் மலையாளப் படம்  இது.

 
மலையாளப்பட இயக்குனர் உண்ணி கிருஷ்ணன் மோகன்லால் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்க  விஷாலும், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேஜர் ரவி இயக்கத்தில் தற்போது நடித்துவரும் 1971  படம் முடிந்ததும் உண்ணி கிருஷ்ணன் படத்தில் மோகன்லால் நடிக்க உள்ளார்.
 
இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதுப் படத்தில் தமிழ் நடிகர் விஷால் ஒப்பந்தமாகியுள்ளது  தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஷால் நடிப்பதால்  இந்தப் படத்தின் மீது சின்னதாக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்