கும்பகோணத்தில் கும்மாளம் போடும் விஜய் சேதுபதி, த்ரிஷா

சனி, 29 ஏப்ரல் 2017 (13:21 IST)
விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற  உள்ளது.

 
 
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுள் ஒருவரான நயன்தாராவுடன் ‘நானும் ரெளடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்தார் விஜய்  சேதுபதி. தற்போது, இன்னொரு டாப் நடிகையான த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 
 
பிரேம்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘96’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தப்  படத்தைத் தயாரிக்கிறது. கும்பகோணத்தில் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து த்ரிஷா கும்மாளம் போடும் காட்சிகளை அங்கு படம்பிடிக்க இருக்கிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்