தலைவர் ஆசி முக்கியம்

சனி, 10 செப்டம்பர் 2016 (10:12 IST)
ராகவா லாரன்சை பொறுத்தவரை அம்மா (அவரோட சொந்த அம்மா) தெய்வம் என்றால், ரஜினி தலைவர். அவரின்றி அணுவும் அசையாது.


 
 
பி.வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் லாரன்ஸ் நடித்துவருகிறார். இதே பெயரில் வாசு கன்னடத்தில் இயக்கிய படத்தின் தமிழ் ரீமேக். இந்தப் படத்தில் ரஜினியை நடிக்க வைத்து சந்திரமுகி பார்ட் 2 என்று ரிலீஸ் செய்யலாம் என கணக்குப் போட்டார் பி.வாசு. ரஜினி தயக்கம் காட்ட, லாரன்ஸ் ஹீரோவானார்.
 
சிவலிங்காவில் நடிக்கும் லாரன்ஸ் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். 
 
சிவலிங்கா ஹாரர் படமாக தயாராகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்