கேன்சர் பாதிப்பு; பிரபல நடிகையின் உருக்கமான ட்வீட்

புதன், 4 ஜூலை 2018 (15:07 IST)
பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. இவருக்கு வயது 43. பாலிவுட் படங்களில் நடித்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து  புகழ்பெற்றார். தமிழில் `பாம்பே' படத்தில் அறிமுகமாகி, `காதலர் தினம்' படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெஹல்லை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2005 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.  திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார்.
 
இந்நிலையில் சோனாலி பிந்த்ரே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக நியூயார்க்கில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், வாழ்க்கை விசித்திரமானது. நீங்கள் எதிர்பார்க்காதது திடீரென நடந்துவிடும். ஆம் என்னை  பரிசோதித்த மருத்துவர், நான் தீவிர புற்றுநோயால பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உடம்பில் திடீரென ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில்  பரிசோதனை மேற்கொண்டேன்.
பரிசோதனையின் முடிவு இவ்வாறாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். இதிலிருந்து விரைவில் மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. புற்று  நோய்க்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறேன். நிச்சயம் வென்றுவிடுவேன். எனக்கு உறுதுணையாக எனது குடும்பத்தினரும், நண்பர்களும் உள்ளனர் என  நெஞ்சை உருக்கும் விதமாக பதிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்