நடிகர்கள், நடிகைகளை பாடகராக்குவதில் முன்னணியில் இருக்கிறார் இமான். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவ கார்த்திகேயன், பாண்டிய நாட்டில் ரம்யா நம்பீஸன், என்னமோ ஏதோவில் ஸ்ருதி, அடுத்து லட்சுமி மேனன் என்று இசை தெரிந்தவர் தெரியாதவர் என்று சகட்டுமேனிக்கு அனைவரையும் பாடகராக்கி வருகிறார்.
நடிகர்களில் தொடங்கிய ஆர்வத்தை இசையமைப்பாளர்வரைக்கும் நீட்டித்திருக்கிறார். அடுத்து பாடலாசிரியர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தொடருமா? ம்.. இசைக்கு வந்த சோதனை.