இமைக்கா நொடிகள்... வில்லனாக நடிக்கவில்லை கௌதம்

திங்கள், 12 செப்டம்பர் 2016 (17:59 IST)
அதர்வா, நயன்தாரா நடிப்பில், டிமான்டி காலனி அஜய் ஞானமுத்து இயக்கும் படம், இமைக்கா நொடிகள்.


 
 
த்ரில்லர் படமான இதில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் வில்லனாக நடிப்பதாகவும் பேசப்பட்டது. ஊடகங்கள் இந்த செய்தியை பகிர்ந்தன.
 
ஆனால், கௌதம், இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்கவில்லை என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தவறாக சொல்லப்பட்ட வதந்தி எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்