அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிக்கும் படம், இமைக்கா நொடிகள். இதில் நயன்தாரா கிட்நாப் குறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார்.
காக்கிச் சட்டை போடும் நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு ஹீரோவை தேர்வு செய்துள்ளார் அஜய். அந்த ஹீரோ நம்ம விஜய் சேதுபதி தான். பெயருக்கு தலையை காட்டிவிட்டு போகாமல் விஜய் சேதுபதிக்கும் போதிய காட்சிகள் உள்ளதாம். நயனும், விஜய் சேதுபதியும் ஏற்கனவே நானும் ரவுடி தான் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் இமைக்கா நொடிகள் மூலம் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள்.