அனுமதியின்றி மது விருந்து - முன்னாள் நடிகைக்கும், மகனுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (16:09 IST)
அரியானா மாநிலத்தில் கடந்த 15 -ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்குகள் எண்ணிக்கை நடந்து வருகிறது. வரும் 22 -ஆம் தேதிவரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரியானாவின் நவாப் வம்சத்தைச் சேர்ந்தவருமான மன்சூர் அலிகான் பட்டோடியின் மனைவி நடிகை ஷர்மிளா தாகூரும், அவரது மகனும் இந்தியின் முன்னணி நடிகருமான சைஃப் அலிகானும் அரியானாவில் உள்ள தங்கள் அரண்மனையில் நேற்று முன்தினம் இரவு மது விருந்து அளித்தளர்.

இதற்காக பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டது.
 
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கையில் அதை மீறி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதற்கும், பொதுமக்களின் அமைதிக்கு பங்களம் விளைவித்ததற்கும், அனுமதி பெறாமல் மது விருந்து அளித்ததற்கும் தேர்தல் ஆணையம் ஷர்மிளா தாகூருக்கும், சைஃப் அலிகானுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்