பிரேக்கப்பா...? - பிரச்சனை பண்ணாம பிரிஞ்சிடணும் - இது இலியானா அட்வைஸ்

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (17:04 IST)
காதலிக்கும் போது கண்ணே மணியே என்பதும், அது தோல்வியில் முடிந்தால் கன்னா பின்னாவென்று திட்டுவதும் உலக வழக்கம். ஆனால், அப்படியெல்லாம் செய்யாதீங்க, கண்ணியமா பிரிஞ்சிடுங்க என்று அறிவுரை கூறியுள்ளார் இலியானா.


 


முக்கியமாக காதலித்து ஒருவர் ஏமாற்றினால் அவரை மன்னிக்க வேண்டுமே தவிர பழிவாங்க நினைக்கக் கூடாது என்றும் ஏசு கிறிஸ்து போல் பேசியிருக்கிறார்.
சரி, இதனை சொல்ல இலியானாவுக்கு என்ன தகுதி என்றுதானே கேட்கிறீர்கள்? அதற்கும் அவர் பதிலளித்திருக்கிறார்.

"காதலிக்கும் போது கனவுலகில் மிதப்பவர்கள், பிரிய நேர்ந்தால் பரஸ்பரம் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள். திட்டிக் கொள்கிறார்கள். நான் ஏற்கனவே காதலித்து இருக்கிறேன். ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டேன். ஆனால் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டவில்லை. நீ உன் வழியில் செல் நான் என் வழியில் போகிறேன் என்று விலகி விட்டோம். பகை உணர்வு காட்டவில்லை. தரக்குறைவாகவும் பேசவில்லை.  காதலித்து பிரிந்தவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். காதலித்து ஏமாற்றுபவர்களை பழிவாங்க நினைக்க கூடாது."

என்ன... இலியானா சொல்வது சரிதானே.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்