இளையராஜா இடம்பெறாத பாரதிராஜாவின் குற்றப்பரம்பரை

திங்கள், 4 ஏப்ரல் 2016 (10:45 IST)
பாலா குற்றப்பரம்பரை கதையை படமாக்க திட்டமிட்டதுமே பாரதிராஜாவின் பிபி எகிறிது. அவரது வாழ்நாள் கனவு, குற்றப்பரம்பரை.


 


ரத்னகுமார் எழுத, பல வருடங்களுக்கு முன் தான் தொடங்கிய குற்றப்பரம்பரை படத்தை நேற்று உலசிலம்பட்டிக்கு அருகில் மீண்டும் தொடங்கினார் பாரதிராஜா. அன்று அதில் நாயகன் சிவாஜி, இன்று, பாரதிராஜா. ஆம், குற்றப்பரம்பரையில் பாரதிராஜாவே பிரதான வேடமேற்கிறார். 
 
அவரது மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பி.கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சாபுசிரில் கலை இயக்கத்தை கவனிக்கிறார். வைரமுத்து பாடல்கள். வைரமுத்து பாடல்கள் என்பதால் இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கப் போவதில்லை. எனில் வேறு யார் இசை? இந்த கேள்விக்கு மட்டும் இன்னும் விடையில்லை. 


 
 
நேற்று நடந்த தொடக்கவிழாவில் சுசீந்திரன் தொடங்கி நவீன்வரை, ஆர்.கே.செல்வமணி முதல் சீமான்வரை இரண்டு டஜன் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். நடிகர் ராஜேஷ், தனஞ்செயன், முத்துக்குமார், கபிலன் வைரமுத்து என்று எங்கெங்கு காணினும் கோடம்பாக்க தலைகளடா என்று சொல்லும் விதத்தில் இருந்தது தொடக்கவிழா. 
 
பாலா குற்றப்பரம்பரையை தொடங்கும் முன் பாரதிராஜா முந்திக் கொண்டார். பாலா குற்றப்பரம்பரையை கைவிடுவாரா இல்லை வீம்புக்கு அதே கதையை அவரும் படமாக்குவாரா? 
 
கோடம்பாக்கத்தில் கோஷ்டி மோதலுக்கான வாய்ப்புகள் அதிகமிருக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்