2 கன்டிஷனால் திருமணத்தை நிறுத்திய பாடகி வைக்கம் விஜயலட்சுமி!

ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (10:57 IST)
கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு பிறந்ததிலிருந்தே பார்வை கிடையாது. குக்கூ படம் உட்பட 40  படங்களுக்கு மேல் அவர் பாடியிருந்தாலும், வீர சிவாஜி படத்தில் அவர் பாடிய சொப்பன சுந்தரி நான் தானே பாட்டு தான்  ஹைலைட்.

 
விஜயலட்சுமி பிறவியிலேயே கண் பார்வை இல்லாமல் இருந்தார். பின்னர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு கடந்த  ஜனவரி மாதம் கண் பார்வை கிடைத்தது. இதற்கிடையே அவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் திருமணம் நிச்சயமானது. திருமணம் மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் விஜயலட்சுமி தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமி படங்களில் பாடக் கூடாது என்றும், இசை ஆசிரியையாக பணியாற்ற வேண்டும் என்றும்  சந்தோஷ் நிபந்தனை விதித்தாராம்.
 
திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமியின் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதித்த சந்தோஷ் தற்போது முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் திருமணத்தை நிறுத்தியதாக விஜயலட்சுமியின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் விஜயலட்சுமிக்கு லட்சியம் உள்ளது என்றும், எதிர்காலத்தை மனதில் வைத்து தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் அவரது தந்தை கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்