விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியப் படம் இடம் பொருள் ஏவல். இப்படத்திற்காக முதல் முறையாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் வைரமுத்துவும் இணைந்தனர். படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் ரிலீஸுக்கு தயாராகும் போது படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பொருளாதாரப் பிரச்சனையில் சிக்க படம் ரிலீஸாவதில் தாமதமாகிக் கொண்டே வந்தது. லிங்குசாமி தயாரித்த உத்தமவில்லன் மற்றும் அஞ்சான் படங்களின் தோல்வியால் மீள முடியாத கடனில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் அவர் தயாரித்த இடம் பொருள் ஏவல் மற்றும் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ரா ரா ராஜசேகர் படங்கள் ரிலீஸாகாமல் மூன்று ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன. லிங்குசாமியும் மூன்று ஆண்டுகளாக எந்தப் படமும் இயக்காமல் இருந்தார்.தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 திரைப்படம் தயாராகி ஆயுதபூஜை வெளியீடாக வர இருக்கிறது.