கன்னடத்தில் வெளியான யூ டர்ன் திரைப்படத்தின் உரிமையை வாங்கி அப்படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிப்பதுடன், நடிக்கவும் செய்கிறார் சமந்தா என ஒரு தகவல் உலவுகிறது.
யூ டர்ன் திரைப்படத்தை பெங்களூரு சென்று பார்த்தார் சமந்தா. அதன் ரீமேக்கில் நடிக்கவும் செய்கிறார். ஆனால், சிலர் சொல்வது போல் அவர் அந்த ரீமேக்கை தயாரிக்கவில்லை. படம் பிடித்ததால் நடிக்க மட்டுமே செய்கிறேன், தயாரிக்கவில்லை என்று சமந்தா கூறியுள்ளார்.