அப்போது, அவர்து உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி எஸ் . முருகன், செங்கல்பட்டு எஸ் .பி அரவிந்தன் அவர்களும் திறந்து வைத்தனர்.
அப்போது, நடிகர் விவேக்கின் நண்பரும் நடிகருமான செல்முருகன் விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார். திரைப்படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் விவேக் இல்லை என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. சமூகத்திற்கு நல்ல கருத்துகளை விதைத்தவர். தமிழகம் முழுவதும் மரங்கன்றுகளை விதைத்தவர். அந்த மரங்களின் வழியே நம்மோடு அவர் வாழ்ந்துகொண்டிருப்பார். காலையில், முதல்வர் ஸ்டாலினிடம் சென்னையில் ஒரு தெருவுக்கு விவேக் பெயரை வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் உரிய முறையில் கடிதம் கொடுத்தால் நிச்சயமாக செய்யலாம் என முதல்வர் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.