அட்லீயிடம் சான்ஸ் கேட்ட ஹாலிவுட் நடிகர்!

வெள்ளி, 11 அக்டோபர் 2019 (19:05 IST)
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'பிகில்' படத்திற்காக இணைந்துள்ளார். 


 
இப்படம் வருகிற தீபாவளில் நாளில் ரிலீசாகவுள்ளது. இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே இயக்கியிருந்தாலும் அத்தனையும் சூப்பர் ஹிட் அடித்து குறுகிய காலத்திலே பெரிய இயக்குனர்களுக்கு ஃடப் கொடுத்து வருகிறார். ஆனால், தொடர்ந்து விஜய்யை வைத்து படமெடுத்து வருவதால் அட்லீயிடம் விஜய்யே நீ மற்ற ஹீரோக்களை வைத்து படம் எடுக்கவேண்டும் என அறிவுரை வழங்கியதாக பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் அட்லீ கூறியிருந்தார். 


 
இந்நிலையில் தற்போது, அட்லீயிடம் பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டூக் சான்ஸ் கேட்டுள்ளார்.  இது குறித்து ட்விட் பதிவிட்டுள்ள பில் டூக், ஹாலிவுட்டிலிருந்து வாழ்த்துக்கள். ஏன் நாம் இருவரும் இணைந்து நம் நாடுகளுக்கான படம் பண்ண கூடாது? என அவர் கேள்வி கேட்டு சான்ஸ் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அட்லீ "சினிமா மீது இருக்கும் காதல் காரணமாக வெவ்வேறு மக்கள் ஒன்றாக இணைந்து திரைப்படங்களை உருவாக்க முயலும் போது இது சுலபமாகவும், ரசிகர்கள் விரும்பும் படியும் அமைகிறது. உங்களால் நான் கவனிக்கப்பட்டது மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்படித்தான் பெரிய கனவுகள் உருவாகிறது. உங்களுக்கு என் மரியாதை’ என பதிவிட்டுள்ளார்.


 
இதே நடிகர் விஜய்யின் சர்க்கார் படம் உருவாகி வந்த நேரத்தில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிடம் சான்ஸ் கேட்டு ட்விட் தட்டியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்