சூரியை தொடர்ந்து பள்ளி ஆசிரியரான ஹிப் ஹாப் ஆதி..!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (11:11 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக மாறி இருப்பவர் ஹிப் பாப் ஆதி. கடந்த 2017ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரமெடுத்த ஆதி தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பாடல், இசை, ஆல்பம், நடிப்பு என திரைத்துறை பிசியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஆதி சமூக பணிகளிலும் அக்கறை கொண்டுள்ளார்.  அந்தவகையில் தற்ப்போது கொரோனா உரடங்கினாள் பள்ளி குழந்தைகளின் படிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் தளத்தில் படம் எடுகின்றனர்.

அந்த வகையில் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக ஹிப் பாப் ஆதி பாடம் எடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர், "கோபிச்செட்டிப்பாளையம் SVISSS பள்ளி மாணவர்களுக்கு தமிழி ஆவணப்படம் இணையவழியில் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான அறிதலை ஏற்படுத்த வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு தமிழன்டா இயக்கம் சார்பில் நன்றிகள்" என கூறியுள்ளார்.  கடந்த தினங்களுக்கு முன்னர் இதே போல் நடிகர் சூரி மதுரை அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்