இசையமைப்பாளராக இருந்த ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார். ஆத்மிகா ஹீரோயினாகவும், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் காமெடியனாகவும் நடித்துள்ள இந்தப் படம், கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. விமர்சகர்கள் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடித்துப் போனது. இளைஞர்களுடன் ஈஸியாக கனெக்ட் ஆவதால், தியேட்டர்களில் கூட்டத்துக்கு குறைவில்லை. இந்தப் படத்தை, இயக்குனர் சுந்தர்.சி.யின் ‘அவ்னி மூவிஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது.
படம் வெற்றி பெற்றாலும், உடனே அடுத்த படத்தை இயக்குவாரா? அல்லது ஒருசில படங்களுக்கு இசையமைத்துவிட்டு லேட்டாக படம் இயக்குவாரா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது. நமக்கு கிடைத்த தகவல்படி, உடனடியாக அடுத்த படத்தை இயக்கத் தயாராகிறார் ஆதி. இந்தப் படத்தையும் சுந்தர்.சி.யே தயாரிக்கிறார்.