பிக் பாஸ் என்னும் ஆபாச நிகழ்ச்சி; 75% நிர்வாணம்: கூண்டோடு கைது செய்ய புகார்!

புதன், 12 ஜூலை 2017 (15:11 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே இதன் மீதான விமர்சனம் அதிகரித்தவாறே உள்ளது. இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்.


 
 
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஆபாச நிகழ்ச்சி எனவும், இதில் ஆபாச வார்த்தைகளை பேசுகின்றனர். 75 சதவீதம் நிர்வாணமாக நடித்து வருகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை கிண்டலடித்துள்ளார்கள் என இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.


 
 
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிக்கும் ஆபாச நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசனையும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்