இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு திரையுலக நட்சத்திரங்களும், தொழிலதிபர்களும் அரசுடன் இணைந்து உதவி செய்து வருகின்றனர். பல தொழில் துறையினர் முடங்கி இருந்த நிலையில், கடந்த வாரம் சினிமா துறை உள்ளிட்ட சில தொழில் துறையினருக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளையுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் என பிரதமர் கூறியுள்ளார்.
சினிமா துறை பணிகளில் ஆரம்பித்துள்ள போதும், தென்னிந்தியாவில் அதிக நடிகர்கள் 60 வயதைக் கடந்த ஹீரோக்களாக உள்ளதால், அவர்களில் யாரும் படப்பிடிப்புத் தளத்துகு வரத் தயாராக இல்லை எனவும் கொரோனா தொற்று காரணமாக அவர்கள் தயங்குவதாக தகவல்கள் வெளியாகிறது.