ஹலோ நான் பேய் பேசுறேன் - வடிவேலு வசனத்துடன் வரும் பேய் படம்

செவ்வாய், 30 ஜூன் 2015 (10:31 IST)
சுந்தர் சி. மற்றும் குஷ்பு பேய் சீசனில் முழுமையாக இறங்கிவிட்டனர். அரண்மனை 2 படத்தை சுந்தர் சி. இயக்க, குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கிறது. இதுதவிர பாஸ்கர் இயக்கும், ஹலோ நான் பேய் பேசுறேன் என்ற படத்தையும் குஷ்பு தயாரிக்கிறார்.
வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், சிங்கம்புலி, ஓவியா, கோவை சரளா நடிக்கும் இந்தப் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர். இதில், வின்னர் படத்தில் வடிவேலு பேசிய வசனம் இடம்பெற்றுள்ளது.
 
ஹலோ, நான் வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள பேசுறேன். நீங்க யாரு பேசுறது என்று போனில் கேட்க, ஹலோ நான் பேய் பேசுறேன் என்று போனில் பதில் வருகிறது.
 
பயமுறுத்தி ரசிக்க வைப்பார்களா தெரியாது. ஆனால் சிரிக்க வைத்து ரசிக்க வைப்பார்கள் என்பதை இந்த டீஸர் உறுதி செய்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்