10 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் ஹாரிஸ் ஜெயராஜ்!

செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:24 IST)
ஹாரிஸ் ஜெயராஜ் இப்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக 2000 ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன், ஜீவா, கே வி ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களுடன் இணைந்து கொடுத்த ஹிட் பாடல்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு திடீரென குறைய ஆரம்பித்தது. இதே போல அவரது பாடல்கள் பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டும், அவரின் சம்பளம் அதிகம் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.

தமிழில் இப்போது அவரிடம் துருவ நட்சத்திரம், மற்றும் லெஜண்ட் ஆகிய படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. இந்நிலையில் டிவிட்டரில் தெலுங்கு ரசிகர் ஒருவர் ‘நீங்கள் தெலுங்கு படத்துக்கு இசையமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிடட்து’ என வருத்தத்தை தெரிவிக்க அதற்கு பதிலளித்த ஹாரிஸ் ‘இப்போது நிதின் நடிக்கும் ஒரு படத்துக்கு இசையமைத்து வருகிறேன். அந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்