சுவிட்சர்லாந்தில் சூர்யா படத்தின் கதை விவாதத்தை நடத்தும் ஹரி

திங்கள், 24 நவம்பர் 2014 (11:30 IST)
சூர்யா - ஹரி இணையும் படத்தின் கதை விவாதம் ஹரி தலைமையில் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
2015 இல் மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிப்பேன் என்று சூர்யா கூறியிருந்தது நினைவிருக்கும். பூஜை வெளியானதைத் தொடர்ந்து ஹரி தனது கதை விவாதக் குழுவுடன் சென்ற வாரம் சுவிட்சர்லாந்த் கிளம்பிச் சென்றார். சூர்யா படத்தின் கதை விவாதத்துக்காகவே இந்தப் பயணம்.
 
பொதுவாக தனது அலுவலகத்திலேயே கதை விவாதத்தை முடித்துக் கொள்வதுதான் ஹரியின் வழக்கம். சமீபமாகதான் அலுவலகத்துக்கு வெளியே கதை விவாதத்தை நடத்துகிறார். தற்போது கதை விவாதக்குழுவை வெளிநாட்டிற்கே அழைத்துச் சென்றுள்ளார்.
 
இந்தப் படம் அனேகமாக சிங்கம் 3 -ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்