தமிழ் நடிகர்களின் படங்கள் ஆந்திரா, தெலுங்கானாவில் சக்கைப்போடு போடுவது போல் தெலுங்கு நடிகர்களின் படங்கள் தமிழில் வரவேற்பு பெறுவதில்லை. தமிழிலும் கொடி நாட்ட வேண்டும் என்ற தெலுங்கு நடிகர்களின் ஆசை அவர்களை தமிழ்ப் படம் நோக்கி இழுக்கிறது.
முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. அதேபோல் தானும் தமிழில் அறிமுகமாக நினைக்கிறார் ஜுனியர் என்டிஆர். அதற்கு அவர் தேர்வு செய்திருப்பது இயக்குனர் ஹரியை என்கிறார்கள்.