த்ரிஷா, ஹன்சிகா அடுத்து காஜல் அகர்வால...?

புதன், 13 மே 2015 (09:14 IST)
சுந்தர் சி. இயக்கத்தில் விரைவில் அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சந்தானம் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளதால் அவருக்குப் பதில் சூரியை ஒப்பந்தம் செய்துள்ளார் சுந்தர். சி. குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் படத்தை தயாரிக்கிறது.
சித்தார்த், த்ரிஷா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகாவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சுந்தர் சி. தெரிவித்துள்ளார். இன்னொரு இனிப்பான செய்தி, காஜல் அகர்வாலும் இந்தப் படத்தில் நடிக்கலாம்.
 
அரண்மனையில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி என மூன்று நாயகிகள் நடித்தனர். இரண்டாவது பாகத்தின் கதையையும் மூன்று நாயகிகள் இடம்பெறுவது போல்தான் எழுதியிருக்கிறாராம் சுந்தர் சி. அந்த மூன்றாவது நாயகி காஜல் அகர்வாலாக இருக்கும் என்கிறார்கள்.
 
அரண்மனை 2 ஆவி படமா இல்லை அழகிகள் படமா?

வெப்துனியாவைப் படிக்கவும்