ஹன்சிகாவை பழக அழைக்கும் விஷால்

சனி, 29 நவம்பர் 2014 (11:03 IST)
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், ஹன்சிகா நடிக்கும் ஆம்பள வேகமாக தயாராகி வருகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆம்பளயில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

திரையுலகின் சமீபத்திய வழக்கப்படி ஒரேயொரு பாடலை மட்டும் முதலில் வெளியிடுகின்றனர். அந்தப் பாடலின் வரிகள் இப்படி ஆரம்பிக்கின்றன.
 
உன் பெயர் என்ன தெரியாது
உன் ஊர் என்ன தெரியாது
நீ யாருன்னு தெரியாது - பரவாயில்ல
தேவை இல்ல உன் வரலாறு...
 
என்னை லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும்கூட - பரவாயில்லை
பழகிக்கலாம்...
 
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் நம்பர் கேர்ள்
பழகிக்கலாம்...
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் நம்பர் கேர்ள்
 
-இப்படி போகிறது அந்தப் பாடல்.
 
படம் ஹிட்டாகும் என்பதற்கு இந்த ஒரு சோறு பதம் போதாதா?

வெப்துனியாவைப் படிக்கவும்