இப்போது பிரபுதேவா வலையில் ஹன்சிகா!!

வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (15:21 IST)
ஹன்சிகா கடைசியாக போகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் ஒரு மலையாள படத்தில் நடித்தார்.


 
 
தற்போது தமிழில் சரியான வாய்ப்பு இல்லாமல் திணறிவருகிறார் ஹன்சிகா. தற்போது ஒரு பிரபல இயக்குனரின் படத்தை கைப்பற்றியுள்ளார்.
 
நயன்தாரா நடித்து வரும் கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தி பதிப்பில் பிரபுதேவா வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் ஹீரோயினாக தான் ஹன்சிகா தேர்வாகியுள்ளார் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்