ஹன்சிகாவை ஹனி என்று நினைத்த தேனீ

ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (15:54 IST)
ஹன்சிகா, விஷால் நடிக்கும் ஆம்பள படத்தின் படப்பிடிப்பு ஊட்டியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் நடந்து வந்தன. சுந்தர். சி அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்.
 
அப்போது எதிர்பாராதவிதமாக தேனீ ஒன்று ஹன்சிகாவின் கையை கடித்தது. சிறிது நேரத்திலேயே கடித்த இடம் வீங்கி வலி அதிகமானது. படப்பிடிப்பு குழுவினர் ஓய்வு எடுக்கச் சொல்லியும் கேளாமல் ஹன்சிகா தொடர்ந்து நடித்தார். கடித்தது ஒரேயொரு தேனீ என்பதால் விபரீதாமாக எதுவும் ஆகவில்லை.
 
அவ்வளவு பேர் இருக்கையில் ஹன்சிகாவை மட்டும் தேனீ எப்படி தேடிப் பிடித்து கடித்தது? ஒருவேளை ஹன்சிகாவை ஹனி என்று நினைத்திருக்குமோ.

வெப்துனியாவைப் படிக்கவும்