தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தில் நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே பணியாற்றுகிறார்கள்.
அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும் போலீஸ் அதிகாரியாகவே நடித்து வருகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித் பைக் ரேஸராக மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் நிறைந்துள்ள வலிமை படம் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாள் அன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் எச். வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென வலிமை படத்தை பற்றி பதிவிட்டுள்ளார். அதவது " அஜித் நடித்த படங்களிலேயே எனக்கு பிடித்தது மங்காத்தா படம் தான், வலிமை படம் மங்காத்தா படத்தை போலவேதான் இருக்கும். அவ்வளவு ஏன் "வலிமை இன்னொரு மங்காத்தா.. அதற்காக காத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.