தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திரை நட்சத்திரமாக இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினியை வைத்து கபாலி திரைப்படம் எடுத்த இயக்குநர் ரஞ்சித் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க உள்ளார். மலேசியாவில் உள்ள தாதாவின் கதையை வைத்து கபாலி படம் எடுத்த ரஞ்சித் தற்போது தமிழகத்தில் இருந்து மும்பை சென்ற ஒரு தாதாவின் கதையை வைத்து படம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் கதைதான் ரஞ்சித் இயக்க இருக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தது. இதனையடுத்து ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எங்க அப்பாவை பற்றி தப்பு தப்பா எடுத்தீங்கன்னா சும்மாவிட மாட்டேன் என்று ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையில் ரஜினிக்குக் கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே எழ ஆரம்பித்துள்ளது.