விஜய் படத்தில் 'மியுட்' செய்யப்பட்ட ஜிஎஸ்டி வசனங்கள்?

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (13:05 IST)
விஜய் நடிப்பில், கடந்த தீபாவளி தினத்தன்று ரிலீஸானது ‘மெர்சல்’படம். ரிலீஸாகி, நேற்றோடு நான்காவது வாரத்தில்  அடியெடுத்து வைத்துள்ளது. ஆனாலும், இன்னும் வசூல் குறையவில்லை என்கிறார்கள். படத்தில் ஜிஎஸ்டி வசனங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 
இந்நிலையில் நேற்று மெர்சல் பட தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’ வெளியானது. தமிழில் அதிக வசூலை பெற்று 200 கோடி  வசூலைக் கடக்க உதவியது. சர்ச்சை வசனங்களை நீக்க வேண்டும் என்று பிரச்சனைகள் எழுந்த பின்னும், தமிழில் அந்த வசனங்கள் நீக்கப்படவில்லை. இந்த பிரச்சனையை தொடர்ந்து தெலுங்கில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 
 
அதிரிந்தி படம் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 454 தியேட்டர்களில் வெளியானது. தமிழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜிஎஸ்டி வசனங்களை மியுட் செய்துவிட்டார்களாம். அதாவது வடிவேலு பேசிய பணமதிப்பிழப்பு வசனமும், விஜய்  கிளைமாக்சில் பேசும் ஜிஎஸ்டி பற்றி பேசிய வசனமும் ஒலியை கட் செய்த பிறகே தணிக்கை வழங்கப்பட்டுள்ளதாம். இருந்தாலும் தெலுங்கில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தெலுங்கு டப்பிங் உரிமை 5 கோடி ரூபாய்க்குதான் விற்கப்பட்டுள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்