நடிகை கஸ்தூரி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் தொழில் அதிபர் லட்சுமி மிட்டலுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் இடையே ஒரே ஒரு தொடர்பு இருப்பதாக கூறி பதிவிட்டிருந்தார். முடிந்தால் இந்த கிசுகிசுவை கண்டுபிடியுங்கள் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரிக்கும் பெரும்பணக்காரர் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும் என்ன தொடர்பு? கிசுகிசு என பதிவிட்டிருந்தார். மற்றொரு டுவிட்டில், அதே தொடர்பு திரு TR பாலுவிற்கும் கஸ்தூரிக்கும் உண்டு. கிசுகிசு 2 கண்டுபிடிங்க என கூறியிருந்தார்.
அதாவது நடிகை கஸ்தூரி, தொழில் அதிபர் லட்சுமி மிட்டல், திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு ஆகிய மூவரின் பிறந்த நாள் இன்று. இதனை தொடர்புபடுத்தியே நடிகை கஸ்தூரி இந்த பதிவியை செய்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்தது.