வெளிநாட்டில் விஜய் ரசிகருக்கு கிடைத்த அதிருஷ்டம் !

செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:22 IST)
தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தின் ஷூட்டிங் தற்போது வெளிநாட்டி நடைபெற்று வரும் நிலையில், ஒரு வெளிநாட்டு ரசிகருக்கு விஜய் கையால் அதிருஷ்டம் கிடைத்துள்ளது.
 

 மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்65 படத்தை பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். விஜய்65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது ஹீரோயினாக அபர்ணா டாஸ் என்பவர் நடிக்கவுள்ளார்

இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் அங்கு கொரொனா அதிகரித்து வருவதால், விஜய்65 படக்குழுவினருடன் ஜார்ஜியா நாட்டிற்குச் சென்றனர். அங்கு விஜய் மற்றும் அவரது படக்குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவிவருவதால் விஜய்65 படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இங்கு மொத்தம் 14 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதால் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ளதைப் போலவே வெளிநாட்டிலும் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

விஜய்65 பட ஷீட்டிங்கில் கலந்துகொண்ட விஜய்யிடம் ஜார்ஜியாவில் வசிக்கும் அவரது ரசிகர் ஒருவர் ஆட்டோகிராப் பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

Thalapathy #Vijay signs autographs for the diehard Georgia FANs. #Thalapathy65 @actorvijay @Vijay65TheFilm pic.twitter.com/Q3H6iK62Og

— #Thalapathy65 (@Vijay65TheFilm) April 13, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்