இளையராஜா எங்களை யோசிக்க வைத்துவிட்டார். இனிமேல் எதுவும் கிடையாது. ஞானவேல்ராஜா

செவ்வாய், 21 மார்ச் 2017 (21:31 IST)
காப்புரிமை என்ற ஒரே ஒரு வார்த்தையை இசைஞானி இளையராஜா எஸ்பிபிக்கு எதிராக கிளப்பிவிட்டது எந்த நேரமோ தெரியவில்லை, தற்போது அனைவருமே இந்த காப்புரிமை குறித்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.



 


இளையராஜா தனக்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை, ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் என்பதை கொஞ்சம் லேட்டாக புரிந்து கொண்ட மற்ற துறையினர் உடனடியாக எங்களுக்கும் காப்புரிமை வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பாடலாசிரியர்கள், பாடகர்கள் தங்களுக்கும் ராயல்டி வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில், தயாரிப்பாளர்களும் இனிமேல் காமெடி காட்சிகள் மற்றும் பாடல்கள் கிளிப்பிங்ஸ்களை டிவிகளுக்கு இலவசமாக கொடுக்க போவதில்லை என்றும், தயாரிப்பாளர்களுக்கு ராயல்டி கொடுத்தால் மட்டுமே இனி டிவிக்கு கிளிப்பிங்ஸை கொடுப்போம் என்றும் ஞானவேல்ராஜா கூறியுள்ளார். இளையராஜா எங்களை யோசிக்க வைத்துவிட்டார். தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிந்தவுடன் பார்க்க வேண்டிய முதல் வேலையே இதுதான் என்றும் அவர் இன்று மதுரையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால் இதுவரை இலவசமாக கிளிப்பிங்ஸ் வாங்கி லட்சக்கணக்கில் விளம்பர இடைவேளையில் சம்பாதித்து வந்த டிவி நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்