கௌதம் ரீமேக் செய்ய விரும்பும் கமல் படங்கள்

சனி, 28 பிப்ரவரி 2015 (14:03 IST)
கௌதம் கமலின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பழைய படங்களை ரீமேக் செய்யச் சொன்னால் உங்கள் சாய்ஸ் எது என்ற கேள்விக்கு கௌதம் அளித்த பதில் சுவாரஸியமானது.
 
கௌதமின் இளமைக் காலத்தில் சினிமா கனவின் உச்சத்தின் போது வெளிவந்த படம், கமலின் சத்யா. அது அவருக்கு மிகவும் பிடித்தமான படம்.
 
கௌதமின் பதிலில் இடம்பிடித்த இரு படங்களும் கமல் படங்களே. சத்யா மற்றும் தேவர்மகன் படங்களை ரீமேக் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
 
பேசாமல் கமலை வைத்து இன்னொரு படம் எடுங்களேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்