எப்பொழுதும் பிசியாக இருக்கும் கமல் தற்போது ஒரே இடத்தில் முடங்கி கிடப்பது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் என கமலின் உடல்நிலை குறித்து நடிகை கௌதமி கூறியுள்ளார். மேலும் கபாலி திரைப்படம் குறித்து கமல் எழுதியதாக கூறப்படும் கடிதம் போலியானது எனவும், அவர் கபாலி படத்தை இன்னமும் பார்க்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.