அது மட்டுமா நடந்தது, காயத்ரி ஒரு குழந்தை மாதிரி, காயூ பேபி என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கொண்டு இருந்த கணேஷ் கூட காயத்ரிக்கு எதிராக கங்கணம் கட்டி இறங்கி நாமினேஷன் செய்தது காயத்ரிக்கு நிச்சயம் பலத்த அடியாக அமைந்தது.
இப்படி பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தனக்கு எதிராக நாமினேட் செய்ததை கண் குளிர பார்த்த காயத்ரியால் எப்படி இவர்களுடன் வரும் நாட்களில் சகஜமாக இருக்க முடியும். இதனால் இந்த வாரம் காயத்ரி பஞ்சாயத்து நிறையவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரைசா ட்யூட்டி ஓவர் ட்யூட்டியாக இருக்கும் என பேசப்படுகிறது.