காந்தி படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ காலமானார்

திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (09:10 IST)
காந்தி படத்தை இயக்கி இந்தியர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த நடிகரும், இயக்குனருமான ரிச்சர்ட் அட்டன்பரோ காலமானார்.

இங்க்லாந்தின் அடையாளங்களுள் ஒன்றாக திகழ்ந்தவர் ரிச்சர்ட் அட்டன்பரோ. காந்தி படம் அவருக்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குனர் உள்பட பல பிரிவுகளில் இப்படம் விருது வென்றது.

இயக்கத்தில் முத்திரைப் பதித்த இவர் நேற்று தனது 90 ஆவது வயதில் காலமானார். இந்தியாவின் பத்மபூஷன், இங்க்லாந்தின் லார்ட் உள்பட பல பெருமைக்குரிய விருதுகளை இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்