த்ரிஷா நயன்தாராவுடன் சிம்ரன்

செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (13:38 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துவரும் படம், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. பெயரில் த்ரிஷாவும், நயன்தாராவும் இருப்பதால் படப்பிடிப்புக்கு அவர்கள் வருவார்கள் என கும்பல் சேர்ந்து ட்ராபிக் ஜாம் ஆகியது தனிக்கதை. 
த்ரிஷாவும், நயன்தாராவும் இந்தப் படத்தின் பெயரில்தான் இடம்பெறுகிறார்கள். படத்தில் ஜீ.வி.யின் இணை, கயல் ஆனந்தி. கூடவே சிம்ரன் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளார்.
 
திருமணத்துக்குப் பிறகு குண்டாகிப்போன சிம்ரனுக்கு அவர் எதிர்பார்த்த வாய்ப்புகளை தமிழ் சினிமா வழங்கவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் அவர் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை. இந்நிலையில் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.
 
த்ரிஷாவும் நயன்தாராவும் சிம்ரனுக்கு கைகொடுப்பார்களா பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்