நடிப்பில் மெருகேற அவர்தான் காரணம்.. பிரபல இயக்குனரை புகழ்ந்த ஜி வி பிரகாஷ்!

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:14 IST)
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை எட்ட உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள அடியே திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் “இப்போது உங்கள் நடிப்பு மெருகேறி வருகிறது. இதற்காக ஏதேனும் நடிப்புப் பயிற்சி எடுக்கிறீர்களா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜி வி பிரகாஷ் “அதற்குக் காரணம் இயக்குனர் பாலாதான். அவர்தான் நாச்சியார் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்தார். அவருக்குதான் நன்றி சொல்லவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்