ரஜினியின் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு. தன்னுடன் மோதுகிறவர்களிடம் மாணிக்கமான ஆட்டோ டிரைவர் ரஜினி சொல்லும் இந்த வசனத்துக்கு திரையரங்குகளில் அப்ளாஸ் அள்ளியது. ரஜினியின் புகழ்பெற்ற வசனம் என்பதால் ஜீ.வி.பிரகாஷும், சாம் ஆண்டனும் ரஜினியை சந்தித்து அவரிடம் இது குறித்து பேசி அவரது சம்மதத்தை வாங்கினர்.